ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் முதலாக சைட் மியூசியம் அமைந்துள்ளது. இந்த மியூசியத்தினை காண பல்வேறு கல்லூரி மாணவர்கள் மற்றும் உள்நாடு வெளிநாடுகளில் இருந்து ஆர்வலர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பாளையங்கோட்டை சதக்கப்துல்லா அப்பா கல்லூரி ஊட்டச்சத்து உணவு இயல் மாணவர்கள் பார்வையிட்டனர். அவர்களை முனைவர் மெர்லின் அழைத்து வந்திருந்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் பள்ளி வரலாற்று துறை ஆசிரியர் சிவகளை மாணிக்கமும் விளக்கம் அளித்தனர். தொல்லியல் சார்பில் தொல்லியல் அலுவலர்கள் அந்தோணி, வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர்களுடன் ஆச்சிமடம் காமராஜ் உள்பட பலர் வருகை தந்தனர்.


