அனவரதநல்லூர் கிராமத்தில் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்கவிழா நடந்தது.
அனவரதநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் தேரடிமணி தலைமை வகித்தார். டிவிஎஸ் அறக்கட்டளை கள இயக்குநர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் ரமேஷ் வரவேற்றார். கிள்ளிகுளம் பனை மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம் சிறப்பு அலுவலர் முனைவர் சுவர்ணபிரியா, கருங்குளம் வட்டாடர வளர்ச்சி அலுவலர்கள் இரா அரவிந்தன், இராம. முத்துக்குமார், வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் கிரேபா, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வரதராஜன் உள்பட பலர் பேசினார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர் பிரதிநிதி செல்வி திரிஷா நன்றி கூறினார்.
இந்த நிகழச்சியில் இலவச பொது மருத்துவ முகாம், தேனீ வளர்ப்பு தொழில் நுட்பம், களப்பணியில் கோவில் மற்றும் பள்ளி வளாகம் சுத்தம் செய்தல், குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், சமுதாய விழிப்புணர்வு கலை நிகழ்சச்சிகள் நடைபெற்றது. நான்காம் நாள் கண் மருத்துவமுகாம் மற்றும் பேரணி சுற்று சூழல் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெறும். தொடர்ந்து மண்புழு உரம் மற்றும் உயிர் உரங்கள் தாயரிப்பு பயிற்சி நடைபெறும்.
ஐந்தாம் நாள் களப்பணி மரம் நடும் விழா, கால்நடைமருத்துவ முகாம், காளான் உற்பத்தி தொழில் நுட்பம், அங்கன்வாடி அமைப்பாளர்களுக்கான வீட்டு காய்கறி தோட்ட பயிற்சி நடைபெறும். ஆறாம் நாள் போதை தடுப்பு மற்றும் சமுதாய விழிப்பணர்வு பேரணி, சித்த மருத்துவ முகாம், வேளாண் உற்பத்தி மேம்பாட்டு முகாம் , மண் வள மேம்பாடு, புதிய பயிர் ரகங்கள் உள்பட விவசாயத்தினை மேம்படுத்தும் முகாம் நடைபெறும். ஏழாம் நாள் நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டுல், களப்பணி வீடு தோறும் ஆரோக்கியம், கொசு ஒழிப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்படும் தொடர்ந்து முகாம் நிறைவு விழா பெறும். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வேளாண்¬ம் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்துள்ளனர்.


