ஆடிப்பெருக்கை முன்னிட்டு தூத்துக்குடி கே.சின்னத்துரை கோல்டு ஹவுசில் நகைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தென் தமிழக மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி மற்றும் தங்கநகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, திருச்செந்தூர், ஏரல் மற்றும் தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஆடிப் பெருக்கையொட்டி ஆக.1 முதல் 5வரை 3 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை சேதராம் என்று சிறப்பு அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடிப் பெருக்கையொட்டி தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கிவரும் கே.சின்னத்துரை கோல்டு ஹவுசில் இன்று காலை முதலே தங்கம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடிப்பெருக்கு சுப தினத்தில் நகை வாங்கினால் வீட்டில் நகை அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதேபோல், சுபகாரியங்களுக்கும் மக்கள் நகை வாங்கிச் செல்வார்கள். எனவே, மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர்.


