தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (04.03.2026) நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக இந்த விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.இத்திட்டம் சுமார் ரூ.150 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற இவ்விழாவில், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


