கிராமங்களின் விளையாடும் சிறுவர்கள் விளையாட்டே அவர்களை சாதனையாளராக மாற்றுகிறது.மார்த்தாண்டம் சரல்விளை குமரி தென்றல் விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
பேச்சு
கிராமங்களில் விளையாடும் விளையாட்டுத்தான் பிற்காலத்தில் அவர்களை
சாதனையாளராக மாற்றுகிறது என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் , குஞ்சாகோடு சரல்விளை குமரித்தென்றல் நற்பணி
மன்ற 13 வது ஆண்டு விழா, சரல்விளையில் நடந்தது. இரண்டு நாள் நடந்த விளையாட்டு விழாவில்
சிறுவர் சிறுமியர் விளையாட்டு, சமபந்தி விருந்து, 1500 மீட்டர் ஓட்டப்போட்டி, மாபெரும்
மாறுவேடபோட்டி, சிறுசேமிப்பு பரிசு வழங்குதல், அறிவுத்திறன் போட்டி, இலவச மருத்துவ முகாம்,
ஆண்கள் மற்றும் மகளிருக்கான வடம் இழுத்தல் போட்டி, கிரிக்கெட் போட்டி நடந்தது. முடிவில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. குமரி தென்றல் மன்ற பேச்சாளர் ஆசிரியர்
ஜாண்சன் தலைமை வகித்தார். மன்ற உறுப்பினர் அஜய் வரவேற்றார், மன்ற செயலாளர் சிவபிரகாஷ்
ஆண்டு அறிக்கை வாசித்தார். கன்னியாகுமரி மாவட்ட பிரஸ் கிளப் தலைவர் ஜாண், மன்ற சடட ஆலோசகர்
வழக்கறிஞர் சிசில்தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, இதுபோன்ற
கிராமங்களில் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டி,
பேச்சுபோட்டி மூலமாகத்தான் மிகப்பெரிய திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். சிறுவயதில்
வெற்றி பெற்று சிறப்பு விருந்தினர்கள் கரங்களால் பரிசுவாங்கும்போது உயர
வேண்டும் என்ற உத்வேகம் வரும். இதனால் அவர்கள் இலகுவாக வெற்றிகனியை எட்டிப்பறிப்பார்கள்.
தற்போதைய இளைஞர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சமூக வளைதலங்கள் மூலமாக அவர்களால்
நிறைய எழுத முடிகிறது. விளையாட்டுகளை கற்று கொள்ள முடிகிறது. எனவே சமூக வலைதளங்களை
முறையாக பயன்படுத்தி எழுத்தாளராக உருவெடுக்க வேண்டும். அதே நேரம் அரசு சம்பந்தப்பட்ட தேர்வுகளை
எழுதி அரசு பணியாளர்களாக உருவெடுக்க வேண்டும். குமரி தென்றல் நற்பணி மன்றம்
வழங்கும் உதவி வழங்கும் நிகழ்ச்சி மூலம் மற்றவர்களுக்கு உதவும் எண்ணமும் மேலோங்க வேண்டும். கொரோனா
தடுப்பு பணி, மரம் நடும் பணி, குளம் தூர் வாரும் பணிகளை செய்யும் இந்த நற்பணி மன்றத்தினை
பாராட்டுகிறேன். என்று அவர் பேசினார். மன்ற உறுப்பினர் அனித் நன்றி கூறினார். நிகழ்ச்சியில்
சரல்விளை குமரித்தென்றல் நற்பணி மன்ற தலைவர் பிரான்சிஸ், செயலாளர் சிவபிரகாஷ்,
பொருளாளர் வில்சன் ராஜ் உள்பட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


