செய்துங்கநல்லூருக்கு இயங்கிய
பேருந்துகள்நிறுத்தம் பயணிகள் பரிதவிப்பு
செய்துங்கநல்லூருக்கு நெல்லை சந்திப்பில் இருந்து இரண்டு டவுண் பஸ் இயக்கப்பட்டு
இருந்தது. இதில் ஒரு டவுண் பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் காலை 6மணி முதல் 10
மணி வரை இப்பகுதிக்கு டவுண் பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
தினமும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்குசெல்வோர், நோயாளிகள் மற்றும்
முதியோர் பஸ் ஏற முடியாமல் தவித்தனர். இன்று காலையில் சுமார் 300க்கு மேற்பட்ட பயணிகள் பஸ் ஏற
முடியாமல் தவித்தனர். மேலும் திருச்செந்தூரில் இருந்து வரும் புற நகர் பேருந்துகளும் செய்துங்க
நல்லூரில் நிற்காமல் பல மீட்டர் தூரம் தள்ளி போய் நின்றது. இதனால் பயணிகள் இங்கும்
அங்குமாக ஓடி பஸ் ஏற இயலாமல் தவித்தனர். இதனால் செய்துங்கநல்லூர் பஸ் நிலையமே
போர்களமாக காட்சியளித்தது.
இது குறித்து தென்னஞ்சோலையை சேர்ந்த கொம்பையா கூறும் போது, செய்துங்கநல்லூருக்கு
இயங்கிகொண்டிருந்த டவுண் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. அதோடுமட்டுமல்லாமல் இந்த பேருந்தை
நம்பி இருக்கும் பயணிகள் புறநகர் பேருந்தில் ஏறிச்செல்லலாம் என்றால் அந்த பேருந்தும்
முறையாக பஸ் நிலையத்தில் நின்று செல்வது இல்லை. எனவே இந்த நேரத்தில் நிறுத்தப்பட்ட
டவுண்பஸ்ஸை செய்துங்கநல்லூருக்கு மீண்டும் இயக்கவேண்டும். மகளிருக்கு இலவசம் என்பது கூட எங்களுக்கு
வேண்டாம். பேருந்து எங்களை ஏற்றி வேலைக்குசெல்ல ஏற்பாடு செய்தாலே போதும். மேலும் தினமும்
ஒரு கண்காணிப்பாளரை பேருந்து நிலையத்தில் நிறுத்தி அனைத்து பேருந்தும் முறையாக
செய்துங்கநல்லூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
பேருந்தை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகவே
உள்ளது.


