ராட்டினம், எட்டுதிக்கும் மதயானை போன்ற திரைப்படங்களை இயக்கி நடித்தவர். கே.எஸ் தங்க
சாமி. தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சொந்த ஊராக கொண்டவர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தினை
மையமாக கொண்டு திரைப்படத்தினை இயக்குவது இவரது சிறப்பாகும். தற்போது இவர் இயக்கும்
திரைபடத்திற்கான இடத்தேர்விற்காக செய்துங்கநல்லூர் வருகை தந்தார். அவரை எழுத்தாளர்
முத்தாலங்குறிச்சி காமராசு, ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல்காதர் உள்பட பலர்
வரவேற்றனர். அவருடன் தூத்துக்குடி சுங்கத்துரை கண்காணிப்பாளர் செல்லத்துரை சுருளிராஜ், திரைப்பட
தயாரிப்பாளர் ஜோசப் கனகராஜ் உள்பட பலர் உடன் வந்தனர்.


