திருப்பணிசெட்டிகுளத்தில் உலக முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்பணிசெட்டிகுளம் ஊராட்சியில் நேற்றைய தினம் உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதந்தி பாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அனைத்து முதியோர்களும் கும்மி அடித்து மற்றும் தங்கள் அனுபவங்களை அனைவரோடும் பகிர்ந்து கொண்டனர். மேலும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சிகளை மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆஷா, உமாகனி, வள்ளியம்மாள், ஜெயலட்சுமி, விஜயா பிளாரிடா, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத்தலைவர் சுயம்புலிங்கம் செய்திருந்தார்.


