தூத்துக்குடி வஉசி துறைமுகத்தினை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் 10ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி இன்று துவங்கியது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 620 ஏக்கர் நிலப்பரப்பு பசுமையாக மாற்றப்பட்டுள்ளது, மேலும் துறைமுகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் புல்வெளி பூங்காங்கள் 7.6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்தினை மேம்படுத்துவதற்கு கடற்சார் இந்தியா தொலைநோக்கு பார்வை-2030 என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுகங்களின் காற்றின் தரத்தை உயர்த்தவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் மற்றும் ஒலி மாசினை குறைக்கவும் துறைமுகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்த மரகன்று நடும் பணியினை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன். துறைமுக பள்ளி வளாகத்தில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் இந்திய துறைமுகங்களில் முதல் பசுமை துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழ்வதற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் துறைமுக பகுதியிலுள்ள காற்று, நிலம், நீர் மற்றும் மண் வளம் போன்ற அனைத்தின் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் துறைமுகம் மேன்மையடையும் என்று கூறினார். துறைமுகத்தின் துறை தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், துறைமுக பள்ளி ஆசிரியர்கள் கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்கு இவ்விழாவில் பங்கேற்ற அனைவரும் முககவகம் அணிந்து மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்து பங்கேற்றனர்.


