முறப்பநாடு காவல் நிலையத்தில் டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முறப்பநாடு காவல் நிலையத்தில் டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் காவல் நிலைய வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி டிஎஸ்பி பவித்ரா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் எஸ்ஐ சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேசுகையில், ஓட்டுனர்களாகிய நீங்கள் காவல்துறையை போலவே ஆங்காங்கே சுற்றிக் கொண்டு வருபவர்கள். உங்களுக்கு அந்தந்த கிராமங்களில் சாலைகளில் நடக்கக் கூடிய அனைத்து சம்பவங்களும் தென்படும். சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவது தெரிந்தால் மற்றும் தங்களது வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான நபர் எவரேனும் பயணம் செய்தால் போதை பொருள்கள் எடுத்துச் செல்வதை அறிந்தாலும் உடனே காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
ஓட்டுனர்களாகிய நீங்களும் சாலைகளில் உள்ள சட்ட விதிகளை மீறாமல் கவனத்துடன் செயல்படவேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படக்கூடாது. போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது. அப்படி மீறனால் சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் காவல்துறைக்கு நீங்கள் ஒரு நண்பனாக இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் போலீசார் மற்றும் டாக்ஸி ஆட்டோ ஓட்டுநரகள் பலர் கலந்து கொண்டனர்.


