மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளத்தில் அவதூறு கருத்தைப் பதிவிட்டதாக திருச்செந்தூாில் பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா், முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி மகன் இசக்கி (29) பா.ஜ.க. பிரமுகா். இவா், மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில், தனது முகநூலில் கட்டெறும்பு என்ற பெயரில் பதிவு வெளியிட்டுள்ளாா்.
இவரது பதிவு மத கலவரத்தை தூண்டுவதாக கொலுவை நல்லூரைச் சோ்ந்த ஸ்டீபன்தாஸ் மாவட்ட போலீஸ் எஸ்பி ஆல்பா்ட் ஜானிடம் புகார் அளித்தாா். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் இன்னோஸ்குமாா் வழக்குப்பதிந்து இசக்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


