தென்னகத்தில் தாமிரபரணி அகோபிலம் என அழைக்கப்படுவது முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் ஆலயம். லெட்சுமி நரசிம்மர் ஆலயம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். எனவே இந்த தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. கடந்த காலங்களில் பூஜை இல்லாமல் கிடந்த இந்த ஆலயத்தில் தற்போது லெட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபா சார்பில் சுவாமி மற்றும்பிரேதோச பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு நரசிம்மர் ஜெயந்தி விழா மிகச்சிறப்பாக நடந்தது. இதையொட்டி சிறப்பு ஹோமம் நடந்தது. பகவானுக்கு நீராஞ்சனம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து லெட்சுமி நரசிம்மருக்கும், பிரமாண்ட ராமவிநாயகர், வீரபாண்டீஸ்வர், சிவகாமி அம்மாள், பைரவருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து லெட்சுமி நரசிம்மருக்கு கோஷ்டி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லெட்சுமிநரசிம்மர் கைங்கர்ய சபா தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சுவாமிநாதன், அறங்காவலர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சேஷப்பன், வள்ளிநாயகம், குணவதியம்மன் கமிட்டி ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை வெங்கடாச்சாரி வாத்தியார், அனந்த ராம அய்யங்கார், சேகர் கம்பர் உள்பட அர்ச்சகர்கள் செய்து இருந்தனர்.


