புதிய பெட்டிகள் பொருத்தப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் வந்தடைந்ததை முன்னிட்டு பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் பயணியர் சங்கத்தினர் கலந்து கொண்டு, பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
மேலும், ரயிலின் லோகோ பைலட் அருள்செல்வன், உதவி லோகோ பைலட் அய்யாசாமி மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் சித்திரைப்புத்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பயணியர் சங்க உறுப்பினர்களான திருமலை, வேம்புதுரை, அப்துல், அப்துல்காதர், மாசிலாமணி, முனைவர் அபிஷ்விக்னேஷ், கோபால், இசக்கிராஜா, பாசில், யாசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



