ஏரலில் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ரெட்டையூரணி இருட்டூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் இவரது மகன் பாரதிராஜா (26). இவர் ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் சுரேஷிடம் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 7 மணிக்கு மாரியம்மன் கோவில் அருகில் இருந்து அய்யப்ப பக்தர்களை வேனில் ஏற்றிக் கொண்டு சபரிமலை யாத்திரை செல்வதற்கு ஏரல் கோவிலுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றுஅதிகாலையில் அய்யப்ப பக்தர்கள் ஆற்றில் குளிக்கச் சென்று உள்ளனர். அப்போது பாரதிராஜாவும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார். இது குறித்து அவர் உறவினர்கள் ஏரல் போலீசில் புகார் செய்தனர். ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்கு பதிவு செய்து பாரதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.


