
தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாகம், சிப்காட் உட்பட 8 காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழக காவல் துறையில் உள்ள சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, க்யூ பிரிவு, தாலுகா காவல் நிலையங்கள், மாநகர காவல்துறை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் 208 உதவி ஆய்வாளர்கள், பணி மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில், தென்பாகம் எஸ்ஐ எம். முத்துகணேஷ், சிப்காட் சங்கர், எப்போதும் வென்றான் எஸ்.பொன்ராஜ், தனிப்பிரிவு எஸ்.நம்பிராஜன், குரும்பூர் எஸ்.தாமஸ், தனிப்பிரிவு எஸ்.உமையொருபாகம், காவலர் பயிற்சி பள்ளி எஸ்ஐ பி.முத்து, தனிப்பிரிவு கிறிஸ்டி ஆகிய 8பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.