கலாபவன் மணி 1 ஜனவரி 1971 – 6 மார்ச் 2016 தென்னிந்தியத் திரைப்பட நடிகனும் பாடகரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத் திரைப்படங்களில் நாயகனாகவும், தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் எதிர்நாயகனாகவும் நடித்துள்ளார். தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வென்றவர்.இவர் நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். திருச்சூர் மாவட்டத்தின் சாலக்குடியில் பிறந்தவர். மலையாள திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு மூவிருளி ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் என்ற திரைப்படத்தில் நடித்ததிற்காக 2000ஆம் ஆண்டில் கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றுள்ளார்.


