இராமனுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணபதி தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி வரவேற்றார். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது. ஆசிரியர் மைக்கேல் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.


