கருங்குளம் அருகே பரரப்பு ஏற்பட்டுள்ளது.
உடைந்து விழுத் துடிக்கும் பள்ளி கட்டித்துக்குள்
மீண்டும் மாணவர்களை மீண்டும் அமர செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 65 மாணவர்கள் உயிருக்கு யார் பாதுகாப்பு தருவார்கள் என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருங்குளம் அருகே கிளாக்குளத்தில் இந்து ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1948ல் துவங்கப்பட்டது. கருங்குளம் ஒன்றியத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இடத்தில் நடைபெறும் மிக முக்கிய பள்ளி இந்த பள்ளியாகும். இந்த பள்ளியில் 65 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது என பல முறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கொடுத்து வந்தனர். இதனால் இந்த பள்ளி கட்டிடத்தில் யாரும் இருக்க கூடாது, அதை கட்டும் வரை வேறிடத்தில் வைத்து பாடம் நடத்த வேண்டும் என கருங்குளம் உதவி தொடக்க கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு அருகில் உள்ள வெங்கிடலாசபதி கோயில் வளாகத்தில் வைத்து பாடம் நடத்தி வந்தனர். மரத்தடியில் வைத்து பாடம் நடத்துவதால் பாதுகாப்பு இன்றி குழந்தைகள் தவித்து வந்தனர். வண்டு கடிப்பது உள்பட பல இன்னல்களுக்குள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளானார்கள். இதற்கிடையில் சத்துணவு போடும் போது மூட்டை போட கோயில் நிர்வாகம் அனுமதிக்க வில்லை. மேலும் வயதுக்கு வந்த மாணவிகள் கோயில் வளாகத்துக்குள் வந்து கல்வி பயில பல கட்டுபாடு விதிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அடிக்கிற காற்றில் நாங்கள் படிக்கும் புத்தகம் பறக்கிறது. இந்த ஆலயத்தில் நாங்கள் கல்வி பயில இயலாது. எனவே எங்களுக்கு புதிய கட்டிடம் உடனடியாக கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் கோயில் நிர்வாகத்தினர் ஆனிதிருவிழா வருகிறது. எனவே கோயிலை வளாகத்தில் பள்ளி மாணவ மாணவர்கள் பயில அனுமதி மறுத்தனர் . இதுகுறித்து தினகரன் நாளிதழ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து பள்ளியை ஆய்வு செய்த பொறுப்பு உதவி தொடக்க கல்வி அலுவலர் உடனடியாக ஆலயத்தினை விட்டு மாணவ மாணவிகளை வெளியேற்றி, பழைய கட்டிடத்தில் அமர செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு புறம் உடைந்து விழத் துடிக்கும் சுவர்கள். கீரல் விழுந்த சுவர்கள், உடைந்த நிலையில்உள்ள ஓடு, மழைக்காலத்தில் ஒழுகும் நிலையில் உள்ள மேல் கூரை. மாணவ மாணவிகளை பதம் பார்க்கிறது. காற்று அடிக்கும் போது ஓடு பறக்கிறது. இந்த ஓடுகள் மாணவர்கள் மேல் விழுந்தால் உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தற்போது மாணவர்கள் உயிர் பயத்துடனேயே தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். ஆசிரியர்கள் இதை பற்றி மேலதிகாரிகளிடம் பேச மூடியாமல் தவிக்கின்றனர். இதை தட்டி கேட்க கல்வி நிர்வாகம் இல்லாத காரணத்தினால் பள்ளி நிர்வாகம் அங்கும் இங்கும் இல்லாமல் தடுமாற்றத்துடன் உள்ளது. இதுகுறித்து இந்து ஜெயலெட்சுமி நடுநிலைப்பள்ளி கமிட்டி முன்னாள் தலைவரும், பள்ளி நிறுவனர் தர்மகண் அவர்களின் மகனுமான குழந்தை ஆழ்வார் கூறும் போது, எங்களிடம் அரசு பள்ளியை எழுதி தாருங்கள் என பத்திரத்தில் எழுதி வாங்கி கொண்டனர். நாங்களும் அரசு பள்ளியை எடுத்து கொண்டது, கட்டிடத்தினை கட்டி பள்ளி கூடத்தினை மேம்மை படுத்துவார்கள் என நினைத்தோம். ஆனால் அதை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு அலுவலர்கள் மெத்தன போக்கால் இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆபத்து வந்துள்ளது. பருவ மழை வரப்போகிறது. அந்த சமயத்தில் கட்டிடம் ஓழுகும். அப்போது மாணவ மாணவிகள் எங்கே செல்வார்கள். பள்ளியில் ரிக்கார்ட் பாதுகாக்கும் அறை கூட சரியாக இல்லை . எனவே உடனடியாக அரசு கட்டிடம் கட்டி தரவேண்டும்.
இதுகுறித்து இந்து ஜெயலெட்சுமி நடுநிலைப்பள்ளி கமிட்டி ஆயுட் கால செயற்குழு உறுப்பினர் கண்ணன் கூறும் போது, 2011 வரை எங்கள் கமிட்டி அற்புதமாக செயல்பட்டு வந்தது. அப்போது பள்ளி கட்டிடத்தினை பழுது பார்த்தல் உள்பட பல பணிகளை சிறப்பாக செய்துவந்தோம். புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அப்போது மாவட்ட கல்வி அதிகாரியும், உதவி தொடக்க கல்வி அலுவலரும் நிர்வாகத்தினை கலைத்து விட்டு ஆசிரியர்களுக்கு நேரடியாக சம்பளம் போட்டனர். அதன் பிறகு பள்ளி கட்டிடத்தினை பழுது பார்க்கவே இல்லை. ஊரில் சிலர் தலையிட்டு சம்பளத்தினை மட்டும் நேரடியாக கொடுப்பவர்கள். அரசுக்கு இந்த பள்ளியை எடுத்துக்கொண்டு புதிய கட்டிடம் கட்டி தாருங்கள் என கோரினர். அந்த கோரிக்கையை ஏற்றுகொண்டதாக அப்போதைய கல்வி அலுவலர்கள், இதற்கான நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது என கூறி வந்தனர். தற்போது பள்ளி கட்டிடம் மிக மோசமாகி விட்டது. கட்டிடம் கட்டி தாருங்கள் என கேட்ட போது அலுவலர்கள் அரசுக்கு எழுதியே தரவில்லை என கைவிரிக்கின்றனர். இப்போது கூட கெட்டுபோக வில்லை கல்வி அதிகாரிகள் மீண்டும் எங்கள் நிர்வாக கமிட்டியை ஏற்று, எங்களை நிர்வாகம் செய்ய ஏற்பாடு செய்தால் 6 மாதத்தில் புதிய கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுப்போம். ஆனால் வேண்டும் என்றே அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் உயிர் மீது விளையாடி வருகிறார்கள். என்றுகூறினார்.
பாக்ஸ் போடலாம்.
கடந்த 2012 டிசம்பர் மாதம் 20 தேதி இவ்வூரில் இருந்து பள்ளிக்கு சென்ற புனிதா என்ற பெண் காமுகனால் கற்பழிக்கப்பட்டு இறந்தாள் . அப்போது டெல்லி சம்பவத்துக்கு நிகராக இந்த சம்பவம் பேசப்பட்டது. ஊருக்கு சாலை வசதி இல்லை. பஸ்போக்குவரத்து வசதி இல்லை. கல்வி சாலைக்கு தக்க கட்டிடம் இல்லை என மக்கள்கோரிக்கை வைத்தனர். அப்போது இந்த ஊருக்கு வந்த கனிமொழி எம்பியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்த அவர் ரயில்வே கிராசில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் மற்ற வேலைகளை மாநில அரசு அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. தற்போது இவ்வூருக்கு வரும் சாலை துண்டிக்கப்பட்டு 2 வருடம் மாகிறது. நடவடிக்கை எடுக்க வில்லை. ரயில்வே பாலம் சுரங்க பாதையாக அமைக்கப்பட்டு, அந்த இடத்தில் நீர் ஊற்று பொங்கியதால் அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து மீண்டும் கனிமொழி எம்.பி.யிடம் சென்னையில் வைத்து மனுகொடுத்தனர். இவ்வூர் மீது தீவிர பற்று கொண்டு அவர், பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் சாலை அமைக்க ஏற்பாடு செய்தார். அந்த சாலையை கடந்த 1 வருடத்துக்கு மேலாக அரசு போட வில்லை. ரயில்வே பாலத்தின் கீழ் சுரங்க பாதை அமைக்கும் பணியும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. எனவே இந்த வழியாக சென்ற ஒரே ஒரே மினிபஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது. மழைக்காலம் வந்தால் இந்த கிராமமே தீவு கிராமாகிவிடும். அதற்குள் நடிவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தொடர்ந்து அடிப்படை வசதிகளை இழந்து வரும் கிளாக்குளம் தற்போது இருக்கும் பள்ளியையும் அதிகாரிகளின் அலட்சியத்தினால் இழந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.