செய்துங்கநல்லூர் – சிவந்தி பட்டி ரயில்வே கேட் பராமரிப்புக்காக 1 ந்தேதி அடைக்கப்படுகிறது.
செய்துங்கநல்லூரில் இருந்து சிவந்திபட்டிக்கு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையில் செய்துங்கநல்லூர் ரயில்வே கிராஸ் உள்ளது. இதன் பராமரிப்பு பணிக்காக 1 ந்தேதி காலை 8 மணி முதல் 6 மணி முதல் கேட் அடைக்கப்பட்டிருக்கும். இந்த சமயத்தில் இந்த பகுதியில் போக்குவரத்து முழுவதும் செய்துங்கநல்லூர் அய்யனார்குளம் பட்டி வழியாக சிவந்திபட்டி செல்ல அறிவுருத்தப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் இந்த சாலையில் அறிவுப்பு பலகை வைத்துள்ளது.
பெட்டி குறைப்பு
மாலை 4 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து ரயில் ஒன்று திருநெல்வேலிக்கு செல்லும். இந்த வண்டியில் தினமும் 11 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். நேற்று சனிக்கிழமை என்பதால் நாலுமாவடியில் இருந்து வழக்கத்துக்கு மாறாக அதிகமான பயணிகள் இந்த ரயிலில் ஏறுவார்கள். ஆனால் இன்று 8 பட்டி மட்டுமே இணைக்கப்பட்டிருந்தது. இதனால் பெட்டி முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதோடு மட்டுமல்லாமல் கார்டு, லக்கேஜ் பெட்டியிலும் மக்கள் ஏறி நின்றனர். எனவே இந்த வண்டியில் தினமும் 11 பெட்டி இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
&&&