வல்லநாடு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது வல்லநாட்டில் பழமை வாய்ந்த அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 4 ஆம் தேதி வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளி நிறுவனர் பாரதி சங்கரலிங்கம் சார்பில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா ஆரம்பம் ஆனது முதலாம் நாள் நெல்லை மாருதி போட்டோஸ்டோர் சேதுராமலிங்கம் மற்றும் சரவணன் சார்பில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஆறாவது நாளில் வல்லநாடு வடக்கு பஜாரில் சூரசம்ஹாரம் நடந்தது. ஏழாம் நாள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண காட்சி சன்னதி முன்பாக நடந்தது. அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் தலைமையில் வெங்கடேஷ் பட்டர், ஹரி பட்டர் ஆகியோர் திருக்கல்யாண சிறப்பு பூஜைகள் செய்தனர்.திருக்கல்யாண காட்சி முடிவில் சாது சிதம்பர சுவாமிகள் தொண்டர் குழாம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.வல்லநாடு மற்றும் சுற்று கிராம பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கூடியிருந்து வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா எனப் பக்தி கோஷமுழக்கமிட்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறப்பநாடு காவல் நிலைய பயிற்சி டி.எஸ்.பி பவித்ரா, ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், பாலையா ஆகியோர் செய்திருந்தனர்


