ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரவு பெய்த பலத்த மழையால் கருங்குளம் அருகே உள்ள சின்னார்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது கார், பைக் போன்ற வாகனங்கள் மூழ்கின.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை கடந்த ஒரு வார காலமாக பெய்து வருகிறது.
இந்த நிலையில் ஶ்ரீவைகுண்டம் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு மேல் பலத்த மாலை பெய்தது. அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது.
இதன் காரணமாக கருங்குளம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட குளங்கள் மறுகால் பாய்ந்து வருகிறது.
இதனால் கருங்குளம் அருகே உள்ள சின்னார்குளம் கிராமத்தில் 50 ககும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் பல வீடுகளில் தண்ணீர் வீடுகளுள் புகுந்தது. இதனால் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் நீரில் மூழ்கியது.
இதற்கிடையில் ராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாதையும் இந்த வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டது.


