செய்துங்கநல்லூருக்கு ஒன்றரை வருடம் கழித்து ரயில் சேவை துவங்கியது. இந்த ரயிலை செய்துங்கநல்லூர் வானவில் வாசகர் வட்டம் மற்றும் பயணிகள் சங்கம் இணைந்து வரவேற்றனர். இதற்காக இரயில் ஓட்டுநர்கள் முத்து லிங்கம், ஜெபராஜ் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் ராஜகோபால் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி , தோணி அப்துல்காதர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் , முத்து ஆகியோரும் பயணிகள் சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற அரசு ஓட்டுனர் சுந்தரம், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மாரியப்பன், கேடிசி முத்து, உள்படப் பலர் கலந்துகொண்டனர்.