காயல் பட்டினம் கல்லூரி மாணவிகள் ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்தனர்.
காயல் பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தமிழ்துறை மாணவிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு செய்தனர். அவர்கள் ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடந்த இடம், மற்றும் வேலி அமைக்கும் இடம் உள்பட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதன் பின் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்களை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள்களை பார்த்தனர். அதன் பின் அங்கு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கருத்தரங்குக்கு தமிழ் துறை தலைவர் அருணா ஜோதி தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். அருங்காட்சிய காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி சிறப்புரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேராசிரியர்கள் சத்திய பாமா, கல்பான தேவி கிறிஸ்டி மெர்சி, ஹெலன், மாரித்தங்கம், முத்துக்குமாரி, செல்வி, கீதா ரஞ்சித பாக்கியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


