கிருஷ்ணாபுரம் – பிரம்ம சக்தியம்மன் கோயிலுக்கு கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
கிருஷ்ணாபுரம் ஸ்ரீபிரம்ம சக்தியம்மன் கோயிலில் கொடை விழா நடைபெற்றது. முதல் நாள் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணி அளவில் சங்குமுகம் தீர்த்தம் எடுத்து செல்லுதல் நடந்தது. பின் கிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோயிலில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது. மாலை 6 மணிக்கு புனித தீர்த்தம் எடுத்து வந்து கும்பம் ஏற்றுதல் , அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு மாக்காப்பு அலங்கார பூஜை நடந்தது. இரண்டாம் நாள் காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், சக்தி ஹோமம் நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின் கருங்குளம் ஆற்றில் கரகம் தீச்சட்டி மற்றும் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.
மாலை 4 மணிக்கு பொங்கல் இடுதல் , மாலை 6 மணிக்கு கனி வகைகள் பூஜை, மாலை 7 மணிக்கு, மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல் நடந்தது. இரவு 10 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவு 12 மணிக்கு இரவு உச்சி காலபூஜை நடந்தது. இரவு 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நடந்தது.
கொடை விழா ஏற்பாட்டை பொன்ராஜ் சுவாமிகள், கணேசன் பட்டர், ஆகியோர் தலைமையில் கிருஷ்ணாபுரம் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோவில் கொடைவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.