செய்துங்கநல்லூரில் சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் ஒலியுல்லா கந்தூரி விழா நடந்தது.
இதையொட்டி முதல்நாள் பீமா தைக்கா தெருவில் இருந்து அரண்மனைகொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. அதன் பின் சந்தை பக்கீர்மஸ்தான் சாகீப் தர்காவில் வைத்து விளக்கு ராத்திரி நடந்தது. மறுநாள் காலை தப்பருக் என்னும் நேர்ச்சை வழக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.