செய்துங்கநல்லூரில் போலி அனுமதி சீட்டில் வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது-
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். சம்பவ இடத்தில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகளின் உத்தரவு படி பிரிவு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசியமான தேவைகள் தவிர்த்து மற்ற போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது- இந் நிலையில் அரசின் உத்தரவை மீறி கொரானா வைரஸ் நோய் பிடிக்கும் அல்லது பரப்பிடும் வகையில் காரணம் இன்றி பயணம் செய்யும் , செயல்படும் நபர்கள் குறித்து சம்பவ இடத்தில் கண்காணித்தனர். அப்போது திருநெல்வேலி மகாராஜ நகர், வசந்தன் காலனியை சேர்ந்த பெரியசாமி மகன் மணிகக ராஜ்(48) என்பவர் தடை உத்தரவை மீறியும் தகுந்த பாதுகாப்பு கவசம் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட ஏதுவாகவும் மற்றவர்களுக்கு மேற்படி நோயை பரப்பும் வகையிலும் ஏமாற்றும் நோக்கிலும் போலியான வாகன அனுமதிசீட்டை உண்மை போல பயன்படுத்தியும் வந்தார். இவரை போலிசார் கைது செய்து, வாகனத்தினை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.