செய்துங்கநல்லூர் நூலக வார விழா ஜோஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. செய்துங்கநல்லூர் வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். ஜோஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெய்தூன் பீவி முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு சிறப்புரை யாற்றினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜேந்திரன், செல்லப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் துரை ராஜ் நன்றி கூறினார்.