அரசர்குளம் பற்பநாதபுரத்தில் கீழ ஆழ்வார் தோப்பு கிராம உதயம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
அரசர்குளத்தில் நடந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் மையத்தலைவர் செல்வி தலைமை வகித்தார். குழுத்தலைவர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக பொறுப்பாளர் இராமச்சந்தரன், தன்னார்வ தொண்டடர் விஜய ஏஞ்சல் ஆகியோர் நிலவேம்பு காசயம் வழங்கினர். பின் டெங்கு காய்ச்சலை ஒழிக்க வேண்டி வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதே போல் செய்துங்கநல்லூர் அருகில் உள் பற்பநாத புரத்தில் நடந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் விழாவிற்கு குழுத்தலைவர் மலர்கொடி தலைமை வகித்தார், மையதலைவி ரூத்கனகா முன்னிலை வகித்தார்.