கால்வாய் கிராமத்தில் நடந்த மாட்டு வண்டி போட்டி மருகால் குறிச்சி வண்டி அபார வெற்றி பெற்றது.
கால்வாய் உலகு முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, மற்றும் குதிரை வண்டி போட்டி நடந்தது. பெரிய மாட்டு வண்டிபோட்டியை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் துவக்கி வைத்தார். சிறிய மாட்டு வண்டி போட்டியை செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் துவக்கி வைத்தார். குதிரைவண்டி போட்டியை
பெரிய மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டி கால்வாய் அரசு பள்ளியில் இருந்து வல்லகுளம் , தெற்கு காரசேரி வழியாக தாதன்குளம் ரயில்வே கேட் எல்லையாக குறிக்கப்பட்டிருந்தது. பெரியமாட்டு வண்டி போட்டியில் முதல் கொடியையும் முதல் பரிசையும், இரண்டாம் பரிசையும் மருகால் குறிச்சி சுப்பம்மாள் வண்டி அணியினர் தட்டி சென்றனர். மூன்றாவது பரிசை சங்கரபேரி மாட்டு வண்டி பெற்றது.
முதல் பரிசான 31 ஆயித்தினை ராமையாவும், இரண்டவது பரிசு 25 ஆயிரத்தினை சிவனும், மூன்றாவது பரிசு 17 ஆயிரத்தினை ஈஸ்வரனும் வழங்கினர்.
சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை, முதல் கொடியையும் மருகால் குறிச்சி, இரண்டாவது பரிசை கால்வாய் முத்துராமலிங்கம், மூன்றாவது பரிசை மேட்டூர் முத்தம்மாள் வண்டி பெற்றது.
முதல் பரிசான 21 ஆயிரத்தினை ராமசந்திரனும், இரண்டாம் பரிசு 15 ஆயிரத்தினை தெயவக்கண்ணனும், மூன்றாம் பரிசு 11ஆயிரத்தினை ஆச்சிமுத்துவும் வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை ரேக்லா ரேஸ் கமிட்டியார்கள் பொன்ராஜ், சிவனு, சேது என்ற சேதுராமலிங்கம், முருகையாபாண்டியன் உள்பட முத்து ஸ்டார் கமிட்டியினர் செய்திருந்தனர்.
இந்த மாத சான்றோர் மலர் இதழில் நான் எழுதிய முத்துக்கிளி தொடர் கதை 12 வது பகுதி வெளி வந்துள்ளது. படித்து மகிழுங்கள்.