செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் ஓழிப்பு தினம் நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அன்சலாம் ரோஜர் முன்னிலை வகித்தார். செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் போதைப் பொருட்கள் தீங்கு குறித்து பேசினார். இதில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கலந்துகொண்டனர். துணை ஆய்வாளர் இராஜா ராம் உள்பட பலர கலந்துகொண்டனர். இயந்திரவியல் துறை தலைவர் ஆறுமுக சேகர் நன்றி கூறினார். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் , என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.