சேரகுளம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேரகுளம் போலிஸ் சரகம், தெற்கு காரசேரி வடக்கு தெரு சுடலை முத்து மகன் ராமசுப்பிரமணி(40), அதே ஊரை சேர்ந்த மாரியப்பன் மகன் சுந்தர் (27) ஆகியோர் கடந்த மே 22 ந்தேதி இரவு வல்லகுளம் அருகே கந்ததேவர் மகன் தங்கபாண்டி(25) என்பவரை கொலை செய்தனர். இதுகுறித்து சேரகுளம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இவர்கள் இருவர் மீதும் மேலும் பல வழக்குகள் உள்ளன. எனவே இவர்கள் இருவர் மீதும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் தந்தூரி உத்தரவின்பேரில் சேரகுளம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ரகுராஜன் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


