தாமிரபரணி அந்த்ய புஷ்கர விழாவில் ௨வது நாளான நேற்று தீர்த்தக் கட்டங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தசாவதார தீர்த்ததில் சிவன், பெருமாள் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
தாமிரபரணி மகா புஷ்கரத்தின் நிறைவு விழா அந்த்ய புஷ்கரமாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருப்புடைமருதூர் சுரேந்திர மோட்ச தீர்த்தத்தில்
காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சங்கல்ப ஸ்நானம், நதி பூஜை, தாமிரபரணி நதி ஆரத்தி நடந்தது. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று சந்திரமவுலீஸ்வரர் மற்றும் நதி பூஜை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச படித்துறை நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் தைப்பூச படித்துறையில் அந்த்ய புஷ்கர விழாவில் ௨வது நாளான நேற்று கைலாசபுரம் கைலாசநாதர் கோயிலில் திருப்பள்ளி எழுச்சி, மங்கள நாதஸ்வர இசை, சங்கல்ப ஸ்நானம், புனித நீராடல், திருமுறை இன்னிசை, சதுர்வேத பாராயணம், ருத்ர ஜெபம், ஹோமம், பூஜைகள், ஓதுவாமூர்த்திகளின் பன்னிரு திருமுறை பண்ணிசை நடந்தது. மாலையில் வேத கோஷத்துடன் மங்கள ஆரத்தி வைபவம் நடந்தது. ஏற்பாடுகளை உஷாராமன் மற்றும் தாமிரபரணி புஷ்கர கமிட்டியினர் செய்திருந்தனர். தசாவதார தீர்த்தம்
வல்லநாடு அகரம் தசாவதார தீர்த்தம், சாத்திய தீர்த்தம், விசுவதேவ தீர்த்தம் அமைந்துள்ள அகரம் கிராமத்தில் அந்த்ய புஷ்கர நிறைவு விழாவில் ௨வது நாளில் வேத பாராயணம், சுதர்ஸன ஹோமம், லெட்சுமி நரசிம்மர் ஹோமம் சூக்தாதி ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து கல்யாண சீனிவாச பெருமாள், நரசிம்மர் உற்சவர் விக்ரகங்களுக்கு சகலவிதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தாமிபரணி நதியில் தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது. மாலையில் தாமிரபரணி நதிக்கு சிறப்பு பூஜை, ஆரத்தி உற்சவம் நடந்தது. இதே போல் காசிவிஸ்வநாத சுவாமி, விசாலாட்சி அம்பாள் கோயிலிலும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, உற்சவர் காசிவிஸ்வநாதர் பிரியாவிடை அம்பாள் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.