நெல்லை தைபூச மண்டபத்தில் மகா புஷ்கரத்தினை வழியனுப்பும் விதமாக தாமிரபரணி ஆற்றில் அந்திய புஷ்கர திருவிழா நடந்தது.
வேளாக்குறிச்சி ஆதினம் 18 வது குருமகா சன்னிதானம் தலைமை வகித்தார். செங்கோல் மட ஆதினம் முன்னிலை வகித்தார். இதையொட்டி கைலாசநாதர் கோயிலில் ருத்ர ஹோமம் நடந்தது. இதை வேளாக்குறிச்சி ஆதினம் துவக்கி வைத்தார் அதன் பின் தாமிரபரணியின் நீராடினார்கள். தொடர்ந்து குருக்குத்துறை மேலக்கோயிலில் நடந்த அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வேளாக்குறிச்சி இளைய ஆதினம் அஜபாநடேசர், ம.தி.தா. இந்து கல்லூரி செயலாளர் செல்லையா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல் திருப்புடைமருதூரில் காஞ்சி மாடாதிபதி விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடினார்கள்.
அடுத்து குருபெயர்ச்சி விருச்சிக ராசியில் இருந்த தனுசு ராசிக்கு மாறுகிறது. எனவே புஷ்கரம் தனுசு ராசி நதியான சிந்து நதிக்கு செல்கிறது. எனவே தாமிரபரணி நதியில் இருந்து புஷ்கரத்தினை வழியனுப்பும் விழா தாமிரபரணி நெடுக நடந்து வருகிறது. இந்த விழா வருகிற 4 ந்தேதி வரை நடைபெறவுள்ளது. வருகிற 3 ந்தேதி திருநெல்வேலி தைபூச மண்டபத்தில் நடைபெறும் விழாவில் காஞ்சி மடம் பெரியவர், வேளாக்குறிச்சி ஆதினம், செங்கோல் மட ஆதினம் உள்பட ஆதின கர்த்தாக்கள் கலந்துகொண்டு, தாமிரபரணி கரை சேவையாளர்களுக்கு விருது வழங்க உள்ளனர்.