தமிழ்ச் செம்மல் விருது பெற்ற வீ. செந்தில்நாயகம், முத்தாலங்குறிச்சி காமராசு வை நெல்லை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம் நெல்லை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து உலக தாய்மொழி தின விழா மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர். வே. விஷ்ணு தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை வாசகர் வட்ட துணைத் தலைவர் முனைவர் கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் இரா.வயலட் நூலக கண்காணிப்பாளர் மு.சங்கரன் ,எழுத்தாளர் நாறும்பூநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் உஷா தேவி எழுதிய ஞானத்திறவுகோல் நூலை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு வெளியிட்டார். நெல்லை மாநகர கமிஷனர் சரவணன் நூலை பெற்றுக்கொண்டார். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எழுத்தளார்கள் வீ. செந்தில்நாயகம், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோரைப் பாராட்டி மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அதன் பின் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.சரவணன் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன் நூல் ஆய்வுரை வழங்கினார். தொடர்ந்து மொழியையும் பண்பாட்டையும் தமிழர்கள் மதிக்கிறார்களா? மறுக்கிறார்களா? என்ற தலைப்பில் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மொழியையும் பண்பாட்டையும் தமிழர்கள் மதிக்கிறார்கள் என்று பேராசிரியை ஜெயமேரி ,முனைவர் கா.சரவணகுமார் கல்லூரி மாணவர் முத்தரசன் ஆகியோரும் மறுக்கிறார்கள் என்று சொல்லரசி கோமதிகிருஷ்ணமூர்த்தி, நல்நூலகர்.அ. முத்துகிருஷ்ணன் கல்லூரி மாணவர் ராகுல் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து கவிஞர் பாப்பாகுடி.இரா. செல்வமணி தலைமையில் காலத்தை வென்ற கன்னித்தமிழ் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கில் கவிஞர்கள் சக்தி வேலாயுதம் சு.முத்துசாமி மூக்குப் பீறி தேவதாசன், சிற்பிபாமா, வைகுண்டமணி, செ.ச.பிரபு, செயந்திமாலா, கோ.கணபதி சுப்பிரமணியன், ஆகியோர் கவிதை வாசித்தனர். வாசகர் வட்டத்தை சார்ந்த நூலகர் முனைவர் அ. முத்துகிருஷ்ணன் ரூபாய் 10 ஆயிரம் செலுத்தி நூலக கொடையாளர் ஆனார். மானுடவியல் பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் மகன் தொ.ப. மாசானமணி, முன்னாள் கூட்டுறவு துணை பதிவாளர் கவிஞர் வைகுண்ட மணி ஆகியோர் ரூபாய் 1000 செலுத்தி நூலக புரவலர் ஆனார்கள். சிவராம் கலைக்கூட இளம் சாதனையாளர்கள், மாவட்டஆட்சியர் வே.விஷ்ணு அவர்கள், படத்தையும் மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் ,அவர்கள் படத்தையும் ஓவியமாக வரைந்தனர். ஓவியத்தை பார்த்து மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் துணை ஆணையர் ஆகியோர், அந்த மாணவிகளை பாராட்டினார்கள். விழாவில் நூலகர்கள் மகாலட்சுமி, கண்ணுப்பிள்ளை, ஸ்ரீனிவாசன், ஜெயமங்களம், சுப்பையா, சுடலைமுத்து கருப்பசாமி, பேராசிரியர்கள் முத்துலெட்சுமி, மங்கையர்கரசி, பாப்பையா, பாஷ்யம், புத்தனேரி கோ. செல்லப்பா, தம்பான், கவிஞர் பாமணி, பாண்டியன், என்.எஸ்.சங்கரன், மற்றும் தமிழ் சான்றோர்கள், வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வாசகர் வட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி நன்றி கூறினார்


