தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றி வரும் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தும் வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ரூபாய் 25 ஆயிரம் பரிசு தொகை வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்தது. இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி தமிழ் செம்மல் விருது மற்றும் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
அப்போது அமைச்சர்கள் பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விஜயராகவன் உடன் இருந்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்திற்கு செந்தில் நாயகம் என்பவருக்கும், தென்காசி மாவட்டத்திற்கு முகிலன் என்ற நாராயணன் என்பவருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு லாசர் என்பவருக்கும் தமிழ்ச்செம்மல் விருது வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கௌரவித்தார்.


