வல்லநாட்டில் பாழடைந்த கிராம நிர்வாக அலுவலகம் மாவட்ட நிர்வாக நடவடிக்கையை எதிர்பார்க்கும் பொதுமக்கள் வல்லநாடு சுப்பிரமணிய சுவாமி கோவில் வடபுறம் வல்லநாடு கஸ்பா கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு ஒருங்கிணைந்த கட்டிடங்கள் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளன. கிராம நிர்வாக அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதற்கான ஆதாரமாக காம்பவுண்ட் சுவரில் காரனேஷன் லைட் 12.12.1911 என்ற கல்வெட்டு இன்றும் இருப்பதைக் காணலாம். வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு கடந்த 1985ல் பொதுப்பணித் துறையினரால் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் கடந்த 1990 க்குப் பின் எந்த வருவாய் ஆய்வாளரும் குடி இருந்ததாகத் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதனால் பராமரிப்பின்றி இந்தக் கட்டிடமும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக் கட்டிடமும் இடிந்து பாழடைந்த நிலையில் உள்ளன இந்தக் கட்டிடங்களின் எதிரில் தனியார் பள்ளியும் பின்புறம் அரசு தொடக்கப் பள்ளியும் உள்ளன. இந்த இடிந்த கட்டிடத்தைக் கடந்து தான் இரண்டு பள்ளி மாணவர்க ளும் மிகுந்த பயத்துடனேயே பள்ளிக்கு வரும் சூழ்நிலை உள்ளது.


