ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது சுந்தரபாண்டிய சாஸ்தா. இந்த கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.
அதே போல் இந்த ஆண்டும் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
இதே போல் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள மணக்கரை புங்கமுடையார், அழகர் சாஸ்தா, வசவப்பபுரம் தென்னம்பாண்டி சாஸ்தா, முத்தாலங்குறிச்சி பூந்தலையூடையார் சாஸ்தா, ஆழிகுடி குருந்துடையார் சாஸ்தா, செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா, அய்யனார்குளம் பட்டி மருகால் தலையுடையார் சாஸ்தா, கருங்குளம் குளந்தங்கரை சாஸ்தா, தெற்குகாரசேரி சாஸ்தா, வல்லகுளம் சின்னதம்பி சாஸ்தா, கால்வாய் நம்பி சாஸ்தா, ஆதிச்சநல்லூர் மலையரசி சாஸ்தா, குலசேகரநத்தம் கரும்புளி சாஸ்தா, இருவப்பபபுரம் பெரும்படை சாஸ்தா, தோழப்பண்பண்னை பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா, ஸ்ரீவைகுண்டம் பரியேறும் பெருமாள் உள்பட பல சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு பணியில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ் தலைமையில் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.