ஆறாம்பண்ணையில் சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி சார்பில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
மாணவர் யாசிர் இறைவணக்கம் பாடினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் அப்துல் கரீம் தலைமை வகித்தார். ஆறாம்பண்ணை ஜமாஅத் தலைவர் உதுமான், பள்ளி செயலாளர் மொன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்ணித்திட்ட அலுவலர் அப்துல் ரகுமான் வரவேற்றார். நிகழ்ச்சியை திட்டஅலுவலர் சாகுல் அமீது தொகுத்து வழங்கினார். நூலகர் சரவண குமார் வாழ்த்துரை வழங்கினார். திட்ட அலுவலர் முகம்மது யஹ்யா நன்றி கூறினார்.


