
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அஞ்சல் அலுவலகம் முன்பு ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி கிராம புற அஞ்சல ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னாள் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். 10 வருடத்திற்கு ஒருமுறை ஊதிய உயர்வு அறிக்கையான அரசு நியமித்த ஆணையான கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை சாதகமான பரிந்துரையை அமுல்படுத்த கூறி 22.05.2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீவைகுண்டம் தலைமை அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.