வல்லநாட்டில் வெள்ளையத்தேவன் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
மக்கள் தொடர்பு அதிகாரி நாவஸ்கான் தலைமை வகித்தார். கருங்குளம் ஆணையாளர் கிரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் வெள்ளையத்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா, வல்லநாடு நூலகர் தளவாய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்து முன்னணி சார்பில் கருங்குளம் ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, அகில இந்திய பார்வட்ர் பிளாக் சார்பில் சுரேஷ்தேவர், சீர்மரபினர் நல சங்க மாநில துணை தலைவர் கார்த்திக் ராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீரெங்கன், ஸ்ரீவை கிருஷ்ணன், பசும்பொன் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த மூரத்தி தேவர், பசும்பொன் இரத்த தான கழகம், புதுக்குடி இளைஞர்கள், சாரல் பவுண்டேஷன், வல்லநாடு மகளிர் அணியினர் உள்பட பலர் வெள்ளையத்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


