ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்காது, நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.
தமிழகஅரசு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கான ஆணையை இன்று மாலை வெளியிட்டது. இதை தொடர்ந்து துாத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்திப்நந்துாரி தலைமையில் அதிகாரிகள் குழு ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று மூடி சீல் வைத்து அரசாணையை கேட்கதவில் ஒட்டினர்.தாெடர்ந்து ஆட்சியர் சந்தீப்நந்தூரி அளித்த பேட்டியில் சீல் வைக்கப்பட்டு விட்டதால் ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்காது, நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது
தமிழக அரசின் அரசாணைப்படி, காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.கடந்த ஏப்ரல் 9-ம் தேதியில் இருந்தே ஆலை மூடப்பட்டுள்ளது.ஆலை மூடப்பட்டு விட்டதால் தூத்துக்குடியில் இயல்பு நிலையை கொண்டுவர மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்தார்.