தமிழகம் கல்வியில் பல முன்னேற்றங்களை கண்டாலும் கூட கிராம புறத்தில் கல்வி கற்றும் மாணவ மாணவிகள் பலர் ஏழ்மையில் தான் வாழ்கிறார்கள். அதில் சிலர் தனது உறவினர்கள் உடன் கூட வெளியூருக்கு ரயிலில் சென்றதில்லை என்ற உண்மை மறுக்கப்படுவதிற்கில்லை.
வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இதே போல் பல மாணவ மாணவிகள் உள்ளனர். இதற்கிடையில் இங்கு பணியாற்றும் சமூக அறிவியியல் ஆசிரியர் ஜெயராமன் கடந்த வருடம் 10 வது வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் போட்டி ஒன்று வைத்தார். அதில் முதல் 10 இடங்களை படிக்கும் மாணவ மாணவிகளை மதுரைக்கு ரயிலில் ஏற்றி சென்று முக்கிய இடங்களை சுற்றி காட்டுவேன் என கூறியிருந்தார்.
அதன்படி முதல் 10 இடம் பிடித்த மாணவ மாணவிகளை கூட்டிக்கொண்டு அவர் மதுரை திருமலை நாயக்கர் மகால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காந்தி மகால் உள்பட பல பகுதிகளை சுற்றி காட்டினார். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜபெர்லின் வல்லநாடு அரசு மேல் நிலைப்பள்ளியில் இருந்து வழி அனுப்பி வைத்தார். சுற்றுலாவில் சமூக அறிவியல் ஆசிரியர் ஜெயராமன் தலைமையில் ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, பொன்ராஜ், ராமலெட்சுமி ஆகியோர் உடன் சென்றனர்.
சுற்றுலா சென்ற மாணவர்களில் சிலர் இதுவரை ரயில் வண்டியே ஏறி செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.