ஸ்ரீவைகுண்டம் குருசுகோவிலில் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா 7ம் நாளை முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் குருசுகோவிலில் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7ம் நாளை முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது. அன்னதான விழாவினை பங்குத்தந்தை மரியவளன் துவங்கி வைத்தார். அன்னதானத்தில் பலஆயிரக்கணக்கான பக்தர்கள், அருட்சகோதரிகள், ஊர்நல கமிட்டியினர், அன்பிய பொறுப்பாளர்கள், பங்குஇறைமக்கள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியவளன், அருட்சகோதரிகள், ஊர்நல கமிட்டியினர், பங்குஇறைமக்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்


