உலகக்கோப்பையில் பங்குபெறும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் தகுதி பெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், தனது பரம வைரியான பாகிஸ்தானை ஜூன் 16-ம் தேதி எதிர்கொள்கிறது.
இந்தநிலையில் உலகக்கோப்பையில் பங்குபெறும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு எதியோர்பார்ப்புகளுக்கு மத்தியில் மும்பையில் தேர்வாளர்கள் இதனை அறிவித்தனர். விராட் கோலி தலைமையில் பங்கேற்கும் அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு, ரிஷப் பான்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.
15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் : விராட் கோலி, தோனி, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், பும்ரா, கேஎல் ராகுல், சஹால், ஹர்டிக் பாண்டியா, முகமது ஷமி, கேதார் ஜாதவ்,