ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள் 3000 வருடம் பழமையானது என கார்பன் பரிசோதனை அறிக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
உலக நாகரீகத்தின் தொட்டில் என போற்றப்படுவது ஆதிச்சநல்லூ நாகரீகம். சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி இதை வலியுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் 114 ஏககர் பரப்பை கொண்டது. இந்த இடத்தில் இந்தியாவிலேயே முதல் முதலாக 1876 ஜெர்மன் நாட்டு அறிஞர் ஜாகோர் என்பவர் அகழாய்வு செய்து கிடைத்த பொருள்களை அவர் நாட்டுககு கொண்டு சென்றார். 1902 ல் ஆய்வு செய்த அலெகஸாண்டர் இரியா என்பவர் இங்கு தோண்டியெடுககப்பட்ட பொருள் சென்னை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார். இதற்கிடையில் 2004 ஆம் ஆண்டு இந்தி தொல் பொருள் ஆராய்ச்சி கழகம் தியாக சத்திய மூர்த்தி தலைமையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என தூத்துககுடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதே போல் சிவகளையில் அகழ்வாய்வு செய்ய வேண்டும் என்று ஒரு மனுவையும் அவர் தாககல் செய்து இருந்தனர். இந்த வழககை உயர்நீதி மன்ற வழககறிஞர் டாகடர் அழகுமணி மனுதாரர் சார்பில் ஆஜர் ஆனார். இந்த இரு வழககும் மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைககு வந்தது. நீதி மன்ற உத்தரவின் படி ஆதிச்சநல்லூரில் வேலி அமைககும் பணி, புறகாவல் நிலையம் அமைககும் பணி, மற்றும் அருங்காட்சியகம் அமைககும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையில் இந்த வழககை கடந்த 19.02.2019 ல் விசாரணை செய்த நீதியரசர்கள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் இந்த பொருள்களை கர்பன் பரிசோதனைககு அமெரிககா புளோரிடாவுககு அனுப்ப உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் படி மாதிரி பொருள்கள் கார்பன் பரிசோதனைககு அனுப்பி வைககப்பட்டது. இதன் அறிககையை நேற்று உயர் நீதி மன்றத்தில்
வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்பன் சோதனைக்காக புளோரிடாவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு பொருட்களில். ஒரு பொருளின் வயது கிமு 905 மற்றொன்றின் வயது கிமு 791 என தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை என மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதோ போல் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு 395 ஆண்டு பழமையானவை என தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் தொன்மை மிகச்சிறப்பாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் முதன் மொழியே தமிழ் என விளங்கவும் இந்த ஆய்வு அறிககை ஒரு காரணமாக அறியும் என எதிர்பார்ககப்படுகிறது.
இதையடுத்து நீதிபதிகள் கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா? என மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11க்கு தள்ளி வைத்தனர்.