செய்துங்கநல்லூர் அருகே உள்ள வசவப்பபுரத்தில் ச.ம.க சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள்விழா நடந்தது.
வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சுப்பையா முன்னிலை வகித்தார். அம்பேத்கார் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இளைஞர்அணி செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் இளையராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.