செய்துங்கநல்லூரில் திருவரங்க செல்வியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி நடந்தது.
இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. அதன் பின் சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பின் சப்பரத்தில் அம்மன் கருங்குளம் ஆற்றில் தீர்த்தமாட கிளம்பினார். அங்கு தீர்த்தமாடிவிட்டு மதியம் மீண்டும் செய்துங்கநல்லூர் நோககி கிளம்பினார். வரும் வழியில் கீழதூதுகுழி, மேலத்தூதுகுழி ஆகிய இடங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். அதன்பின் செய்துங்கநல்லூர் அன்னதான சத்திரத்தில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார். கஸ்பா வேளாளர் தெரு, ரயில்வே ஸ்டேஷன் தெரு, புது தெரு, தென்னஞ்சோலை, வி.கோவில்பத்து வழியாக அம்மன் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் சண்முகசுந்தரம் கம்பர் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.