ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் பத்மநாபமங்கலம் உள்பட 4 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் 31ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சித் தலைவா் பதவிகான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், பத்மநாபமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு சிவகாமி வைகுண்டபாண்டியன், கீ.வரதராஜபுரம் ஊராட்சித் தலைவராக பாத்திமா, அப்பன்கோவில் ஊராட்சித் தலைவராக சந்தனமாரி, சூளவாய்கால் ஊராட்சித் தலைவராக வேங்கையன் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
எஞ்சியுள்ள 27 ஊராட்சித் தலைவா் பதவிக்கு இம்மாதம் 27 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கானபணிகளை மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சுப்பிரமணியன் தலைமையில் பணியாளா்கள் செய்துள்ளனா்.
இதனிடையே, போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்ட 4 ஊராட்சித் தலைவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலரானஉதவித் திட்ட அலுவலா் விநாயகமூா்த்தி, சிற்றூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்பிரமணியன் ஆகியோா் சான்றிதழை வழங்கினா்.