புகழ்பெற்ற கே. சின்னத்துரை அன் கோ நிறுவனத்தின் திண்டுக்கல் கிளை திறப்பு விழா வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை தலைமையிடமாகக் கொண்டு, ஜவுளி மற்றும் தங்க நகை வணிகத்தில் புகழ்பெற்று விளங்கும் கே.சின்னத்துரை அன் கோ நிறுவனத்தின் புதிய கிளை, வருகிற 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பழனி பைபாஸ் ரோட்டில், திண்டுக்கல்லில் திறக்கப்பட உள்ளது.
தென் தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஜவுளி மற்றும் நகைத் துறையில் நம்பிக்கை மிகுந்த நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் ஏரலில் நிறுவனர் கே.சின்னத்துரை நாடாரால் ஏரலில் துவக்கப்பட்டு, திருச்செந்தூர், தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பல கிளைகளை கொண்டுள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய கிளையை தொடங்குகிறது.
இந்த புதிய கிளை திறப்பு விழா வரும் 25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஜவுளி வாங்குபவர்களுக்கு 10% சிறப்பு தள்ளுபடியும், ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு நிச்சயப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


