தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துககு ஜமாத் தலைவர் முகம்மது அலி தலைமை வகித்தார். பாப்புலர் மாவட்டத்தலைவர் அப்துல்காதர் பேசினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முசம்பில், பாப்புலர் ப்ரண்ட் யூனிட் தலைவர் அபுபைத், உபைத்துல்மால் செயலாளர் ஹாக்கிப் தமிழ்நாடு தவ்கீத் கிளை நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஓய் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஜிம்மா தொழுகைக்கு பிறகு ஜமாத்தார்கள் ஊர் இளைஞர்கள் உள்பட பலர் பேரணி நடத்தினர். இந்த பேரணி செய்துங்கநல்லூர் பஸ் நிலையத்தினை நோககி கிளம்பியது. அப்போது காவல் துறையினர் அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் மத்திய அரசையும் காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை முழங்கினார்கள். அதன் பின் கலைந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.